இவ்வாலயத்திலே மிக்க உரிமையும் கரிசனையும் கொண்டவரான கரணவாய் குருமாரிலே மூத்த குருவான சோமசுந்தரக்குருக்கள் அம்பாளுக்கு கிரியைகளை ஆற்றிவரும்வேளை மனநோயால் பீடிக்கப்பட்டார். அக்காலத்திலே ஆலயப்பணிகளை செவ்வனவே நிர்வகிக்கவேண்டிய தேவை உணரப்பட்டமையால் குருக்களின் நெருங்கிய உறவினரான உயர்திரு சு.கைலாயப்பிள்ளை சட்டம்பியால் தலைமயிலே ஒரு பரிபாலனசபை உருவாக்கப்பட்டது. ஆலயக்கடமைகளை நிறைவேற்ற ஆலய ஸ்தாபகர்த்த பென்னுஞானியரும் அவரைத் தொடர்ந்து மகன் குமாரசுவாமிப்பிள்ளையும் கடமை புரிந்தார்கள். இந்தக்காலத்திலே ஆலயபரிபாலனத்தை ஆலயத்தின் நில உரிமையாளரும், திருப்பணிகளை மேற்கொண்டவர்களும் ஒரு சிறிய குழுவாக செயற்பட்டமையால் பரிபாலனத்தின் பொருட்டு தலைவரது அறிவுரையுடனேயே ஆலய கடமைகள் சிறப்பாக நடைபெற்று வந்தன. ஆலயத்தின் பரிபாலனத்தை மிக எளிமையான முறையிலேயே நடாத்த வசதியாக இப்பகுதி மக்களது இயலபை கருத்திற் கொண்டு பத்துக்குழுவை அமைத்த் அவர்களின் உதவியுடன் வைசாகி விசாகப்பூரணையிலே தீர்த்தோற்சவத்தை கொண்ட பத்து நாள் உபயகாரர் பொறுப்பேற்று நடத்தினர். பரிபாலனத்தின் உதவியுடன் சப்பறம், தேர், சகடை, குதிரை, சிங்கம் முதலான வாகனங்களும் தருவிக்கப்பட்டன. இதைவிட இக்காலத்திலே சுற்றுமதில், மடைப்பள்ளி, களஞ்சியம், வசந்தமண்டபம் முதலானவை நிர்வகிக்கப்பட்டது. மேலும் 1950இல் புதிய விக்கிரகம் ஒன்று இந்தியவிலிருந்து கொண்டுவந்து ஸ்தாபிக்கப்பட்டது. 1976இல்புவனேஸ்வரி அம்பாளுக்கும் ஏனைய கடவுளுக்கும் அஸ்டபந்தன மகாகும்பாபிஸேகம் நடைபெற்றது.
தொடந்து வந்த நாட்களில் ஆலய பரிபாலனத்தை மறுசீரமைக்க எண்ணிய பொதுமக்கள் தலைமை பொறுப்பை இவ்வூர் வாசகரும், ஓய்வுபெற்ற பாடசாலை அதிபருமான திரு சபா.செல்வநாயகம் என்பவரிடம் ஒப்படைத்தனர். அவர் 1986.05.31இல் தமது கடமைகளை பொறுப்பேற்றதை தொடர்ந்து பண்டிதர் கை.நமசிவாயக்குருக்கள் மற்றும் கல்விமான்களின் ஆலோசனையுடன் ஆலயத்தின் திருவிழா உபயகாரரதும் ஒத்துழைப்புடன் ஆலயபரிபாலனத்துக்கான யாப்பினை வரைந்து பொதுச்சபையை கூட்டி பரிபாலனத்தை நடாத்திவந்தார். ஊர்மக்களிடம் நிதிதிரட்டி அதன்மூலம் 1989.09.14இல் அம்பாளுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாவிஷேகம் நடத்தப்பட்டது. மேலும் இவ்வாலயத்திற்கு 1989.03.27 முதல் இந்து காலச்சார அமைப்பின் விதிமுறைகளுக்கமைய பதிவு செய்யப்பட்டதுடன் சமய சமூக பணிகளையும் ஆற்றியது. அதன்மூலம் ஒரு கலை கலாச்சார அரங்கை அமைக்க முற்பட்டனர். அதன் பேறாக 1970இல் திருவாளர்கள் வி.செ.சுவாமிநாதன், இ.செல்வநாதன், மகேஸ்வரராஜா என்பார் அத்திவாரமிட்டு கலைக்கூடம் ஒன்றினை கட்டினர்.
பரிபாலன சபையின் சமூகப்பணியாகிய சமய அறிவுப்போட்டி, பண்ணிசை வகுப்பு, பிரதிவெள்ளி தோறும் பஜணை, குழபராயணம் என்பவை மேற்கொள்ளப்பட்டது. 1992இல் பரிபாலனசபை மேற்கொண்ட முயற்சிகளது பேறாக தெற்கு மேற்கு வீதிகள் விஸ்தரிக்கப்பட்டது. இதுதவிர ஆலயத்தின் பரிவாரமூர்த்தியாகிய விநாயகரை அவ்வூர்வாசியும் புனருத்தாரய சபைத்தலைவருமாகிய திருவாளர் இராசநாயகம் அவர்கள் தமது மாமனாரின் நேர்த்தியை 1990.04.30 அன்று பிரதிஸ்டை செவித்து வைத்தார்.
இந்தக்காலத்தில் அம்மாள் வழிபாட்டிலே மகளீரை முதன்மைப்படுத்த எண்ணிய தலைவர் பெண்கள் மட்டும் உள்ளடக்கிய வழிபடுவோர்சபையை 1992இல் கார்த்திகை மாதம் பூரணை தினத்தில் ஆரம்பித்து வைத்த விளக்குப் பூசை தொடர்ந்தும் பிரதிபூரணை தோறும் சிறப்பாக நடந்துவருகிறது.
பரிபாலசைத் தலைவர் அமரர் சபா.செல்வநாயகம் நோய்வாய்ப்பட்டு சிவபதம் அடைந்ததால் பரிபாலனசபைத் தலைவராக திரு.ச.சோமசுந்தரம் நியமிக்கப்பட்டார். இவரது விடமுயற்சியால் ஆலயத்தின் மேம்பாடு கருதி ஆலய யாப்பு மீளாய்வு செய்யப்பட்டது. இதன்படி கட்டுக்கோப்பு விதிமுறைகள் தயாரிக்கப்பட்டு முதல் கல்லச்சுப் பிரதியாக வெளியிடப்பட்டது. அத்துடன் அவரது முயற்சியால் 208 கிலோ எடையுடைய கண்டாமணி பொருத்தப்பட்டு பிரதிஸ்டை செய்யப்பட்டது. மேலும் தெருக்கான பாதுகாப்புக் கொட்டகை, கொடித்தம்பம், யாகசாலை, வைரவர் கோவில் என்பவற்றை நிறுவி மகாகும்பாபிசேகம் நடந்தேறியது.
உள்ளடக்கம்
ஆலயபரிபாலனம்
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten