யாழ் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் இந்துப் பண்பாட்டு அம்சம்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது. இக்கிராமங்களில் பருத்திதுறை என்னும் பிரிவில் கரவெட்டி என்னும் பிரதேசம் அமைந்துள்ளது. கரவெட்டி பிரதேசம் பல பகுதிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இக்கரவெட்டி பிரதேசத்திலேயே கரணவாய் என்னும் பகுதி உள்ளடங்குகின்றது. இப்பகுதி அதிகமான வயல்களையும், அதிகமான ஆலயங்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது.
இப்பிரதேசம் ஆரம்பத்தில் நான்கு கிராமசேவகர் பிரிவைக் கொண்டு அமைந்தது. தற்காலத்தில் அது ஒன்பது பிரிவுகள் ஆக்கப்பட்டு உள்ளது. இப்பிரதேசத்தில் அரசாங்கத்தின் முக்கிய அலுவலகங்கள், கல்விக்கூடங்கள், இந்து சமைய நிறுவனங்கள், பல்வேறு தொழில்நிறுவனங்கள் போன்ற இன்னோரன்ன அம்சம்கள் காணப்படுகின்றன.
இக்கிராம மக்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக காணப்படுகின்றனர். அவ்வகையில் கரணவாய் சிறப்பு பெறுகிறது. கோயில்கள் பல நிறைந்த இடமாக இக் கிராமம் காணப்படுகிறது. அவ்வகையில் இப்பிரதேசத்தில் சிவன்கோவில், அம்மன்கோவில், விநாயகர்கோவில், முருகன்கோவில் என்பவற்றுடன்க் கிராமியத் தெய்வங்களான கண்ணகி, ஜயனார், வைரவர், நாச்சிமார், பெரியதம்பிரான், நாகதம்பிரான், காளி என்பவற்றுக்கு தனிதனி கோயில்களும் காணப்படுகின்றன.
இங்கு வாழும் மக்கள் அதிகமாக வழிபாட்டில் சிறந்த ஈடுபாடு உடையவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். இதை அவ்விடத்தில் அமைந்து உள்ள ஆலயங்கள் மூலம் உணரலாம். இப்பிரதேச மக்கள் அம்மனை முதன்மை படுத்தி வழிபாடு இயற்றியமைக்கு பல காரணங்கள் இருந்துள்ளன. அம்மனை வழிபடுவதன் மூலம் நிலவளம், விளைச்சல் பெருகும், வாழ்க்கை நலம், அறிவுப் பேறு என்பவற்றை நாட்டுக்கும் மக்களுக்கும் அருளும் தெய்வமாக இந்துக்கள் கருதினர். இவ்வகையில் உச்சில் அம்மன் ஆலயம் சிறப்புப் பெறுகிறது.

இக்கோயில் வயல்களால் சூழப்பட்டு உள்ளது. உச்சில் அம்மன் கோயிலுக்கு வடகிழக்காக வற்றாத நீர்ச்சுனையாகிய மாணிககவளை தீர்த்தக்கேணி உள்ளது. இவ்வாலயத்திற்கு வடக்குப் புறமாக அறநெறிப் பாடசாலை ஒன்றும், கலா மன்றம் ஒன்றும், வாசகசாலை ஒன்றும் காணப்படுகிறது. இவை இவ்வாலயப் பரிபாலன சபையால் தோற்றவிக்கப்பட்டது. இக்கோயிலுக்கு அருகே கரவை கரவை வெல்லன் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளதுள்ளது. அம்மனுக்கு நேரெதிராக வயல்தாண்டி முருகன் ஆலயம் அமைந்துள்ளது. கரணவாயிலே யா/வேதாரணீஸ்வர வித்தியாலயம், யா/விக்னேஸ்வராக்கல்லூரி என்பன அமைந்துள்ளது. அதைவிட ஜனசக்தி, வேதாரணீஸ்வரா எனும் இரண்டு நூலகம் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
இவ் வாறாக இவ் ஆலயத்தின் அமைவிடம் பற்றி கூறலாம்.
Geen opmerkingen:
Een reactie posten